லால் சலாம் - நடிகை தன்யா பாலகிருஷ்ணா
லால் சலாம் - நடிகை தன்யா பாலகிருஷ்ணாபுதிய தலைமுறை

நடிகை தன்யா பாலகிருஷ்ணாவின் பதிவால், ‘லால் சலாம்’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்!

லால் சலாம் படத்தினை தமிழகத்தில் வெளியிட தடைவிதிக்க கோரி சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடித்து, அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம், லால் சலாம். இத்திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்னு விஷால், நடிகை தன்யா பாலகிருஷ்ணா என பலர் நடிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் இப்படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா தனது சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

நடிகை தன்யா பாலகிருஷ்ணா
நடிகை தன்யா பாலகிருஷ்ணா
லால் சலாம் - நடிகை தன்யா பாலகிருஷ்ணா
16 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி மதுரை விமான நிலையத்தில் கைது!

அதனை மேற்கோள்காட்டிய சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம், சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்று அளித்துள்ளார்.

அதில், “இவர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். ஆகவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும். மேலும் இப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com