16 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி மதுரை விமான நிலையத்தில் கைது!

16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, மதுரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட மணிசங்கர்
கைது செய்யப்பட்ட மணிசங்கர் puthiya thalaimurai

செய்தியாளர் - சுபாஷ்

மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து பயணிகள் விமானம் நேற்று பிற்பகல் 11.45 மணிக்கு மதுரை வந்தது. அதில் வந்த பயணிகளின் விவரங்களை விமான நிலைய சுங்க இலாகா மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் மதுரை ஆத்திகுளம் அருகே உள்ள மூகாம்பிகை நகர்ப் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் மணிசங்கர் என்பவரிடம் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் மீது மதுரை மதிச்சியம் காவல்நிலையத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதும், அவர் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மணிசங்கர்
தேனி | 300 தென்னங்கன்றுகளை வெட்டிய திமுக ஊராட்சிமன்ற உறுப்பினர்; குடும்பத்துடன் விவசாயி போராட்டம்!
Arrested
Arrestedpt desk

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், மதுரை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து, வந்த போலீசார் மணிசங்கரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை நேற்று மதுரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com