விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி சொன்னது என்ன?

தமிழ்நாட்டில், திருச்சி விமான நிலைய முனையம் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரத்து140 கோடி ரூபாய் மதிப்பிலான 20 திட்டங்களை பிரதமர் மோடி அர்ப்பணித்து வைத்தார்.

1,100 கோடியிலான திருச்சி விமான நிலைய முனையம், மதுரை- தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை உள்ளிட்ட ரயில் திட்டங்கள், நான்கு வழிச் சாலை திட்டங்கள், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் வணக்கம் எனக்கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி எனது தமிழ் குடும்பமே... புத்தாண்டு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”விஜயகாந்த் சிறந்த தேசியவாதி என புகழாரம் சூட்டினார். மேலும், “அவர் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டன் என்றும் அவரது மறைவு தமிழகத்திற்கே இழப்பு” என பிரதமர் பேசினார். அவருடைய உரை குறித்து இந்த வீடியோவில் பார்க்கவும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com