திமுக உடன் தேமுதிக கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்
திமுக உடன் தேமுதிக கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்pt

திமுக-தேமுதிக கூட்டணி| “கலைஞர் கூறியது நடந்துவிட்டது; அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார்" - பிரேமலதா

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக உடன் கூட்டணியை உறுதிசெய்துள்ளது தேமுதிக. அறிவாலயத்திற்கு நேராக சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை உறுதிசெய்தார்.
Published on
Summary

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக-தேமுதிக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் கூறியது நடந்துவிட்டதாக தெரிவித்தார். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், கூட்டணியின் விவரங்களை ஸ்டாலின் அறிவிப்பார் என கூறினார்.

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவருகிறது. ஒருபக்கம் ஆட்சியில் இருக்கும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப முழுமூச்சாக செயல்பட்டு வரும் அதிமுக, பாஜக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக என அடுத்தடுத்த கூட்டணி அறிவிப்புகளை வெளியிட்டு தங்களுடைய கூட்டணியை வலுவானதாக மாற்றியது.

மறுபக்கம் ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் முயற்சியில் அனைத்து வியூகங்களையும் வகுத்துவரும் திமுக, தங்களுடைய வெற்றியை உறுதிசெய்யும் வேலையை கனகட்சிதமாக செய்துவருகிறது.

முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் கே. பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் கே. பழனிசாமிpt web

இந்தசூழலில் எந்தபக்கமும் செல்லாமல் இருந்துவந்த தேமுதிக, யார் பக்கம் செல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. புதியதாக களம்கண்டிருக்கும் விஜய் தலைமையிலான தவெக கட்சியால் ஓட்டுக்கள் சிதறும் என்பதால், இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணியை உறுதிசெய்வதில் மும்முரம் காட்டின.

கடைசிநேரம் வரை தேமுதிக, அதிமுகவின் பக்கமே செல்லும் என சொல்லப்பட்டது. சமீபத்தில் ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசிய நிலையில், அதிமுக- தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே தகவல் பரவியது.

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக
திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிகweb

இந்தசூழலில் தான் கடைசி நேர டிவிஸ்ட்டாக திமுக கூட்டணியில் முதல்முறையாக இணைந்துள்ளது தேமுதிக. முதல்வர் ஸ்டாலினை நேராக சென்று சந்தித்த தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை உறுதிசெய்தார்.

திமுக உடன் தேமுதிக கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்
’அவ்ளோ தொகுதிகள் தரமுடியாது..’ கதவடைத்த அதிமுக, திமுக.. கடும் நெருக்கடியில் தேமுதிக!

கலைஞர் கூறியது நடந்துவிட்டது..

முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், திமுக-தேமுதிக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக
திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது தேமுதிக

தொடர்ந்து பேசிய அவர், ”தேமுதிகவும்- திமுகவும் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. நிர்வாகிகள் விருப்பத்தின் பேரில் கூட்டணியை அமைத்திருக்கிறோம். 2016-ல் இந்தக் கூட்டணி அமைய வேண்டியது. அந்த நேரம் பழம் நழுவி பாலில் விழப்போகிறது என்று கலைஞர் கூறினார். 10 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. எத்தனை தொகுதி உள்ளிட்ட பல விவரங்கள் தொடர்பாக குழு அமைத்து, பேசி முடிவெடுத்தப் பின் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். இந்தக் கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்” என தெரிவித்தார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தேமுதிக முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக உடன் தேமுதிக கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்
திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த தேமுதிக.. கடைசி நேரத்தில் திடீர் டிவிஸ்ட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com