”தேமுதிகவில் தொய்வா?; பார்ப்பவர்களின் கண்களுக்கு வேண்டுமானால் அப்படித் தெரியலாம்” - பிரேமலதா பதில்

“தேமுதிக கட்சியில் எந்த தொய்வும் இல்லை. ஆரோக்கியமாகதான் இருக்கிறது” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தேமுதிக கட்சியில் எந்த தொய்வும் இல்லை. நல்ல ஆரோக்யத்துடனே இருக்கிறது. பார்ப்பவர்களின் கண்களுக்கு வேண்டுமானால் அப்படித் தெரியலாம். எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. கேப்டன் எந்த நோக்கத்திற்காக கட்சியை ஆரம்பித்தாரோ அதை நிச்சயம் அடைவோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com