பிரதீப் ஜான் கண்டனம்
பிரதீப் ஜான் கண்டனம்முகநூல்

“வாங்கும் ஊதியத்திற்கு சரியாக பணி செய்யுங்கள்” - பாலச்சந்திரனுக்கு பிரதீப் ஜான் கண்டனம்!

சென்னை ராணி மேரி கல்லூரியில், மாநில அளவிலான அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாலச்சந்திரன், தரவுகளை வைத்து வானிலை பற்றி பேசுவதும், புகழுக்காக பேசுவதும் வேறுவேறு எனத் தெரிவித்தார். இதற்கு பிரதீப் ஜான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on

கனமழைக் காலத்தில் சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் புகழுக்காக பேசுவதாக, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்த நிலையில், அவருக்கு பிரதீப் ஜான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில், மாநில அளவிலான அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாலச்சந்திரன், தரவுகளை வைத்து வானிலை பற்றி பேசுவதும், புகழுக்காக பேசுவதும் வேறுவேறு எனத் தெரிவித்தார்.

 பிரதீப் ஜான் கண்டனம்
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இந்த நிலையில், பாலச்சந்திரனின் பேச்சுக்கு எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “வாங்கும் ஊதியத்திற்கு சரியாக பணி செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Pradeep John Tweet
Pradeep John Tweet

இருப்பினும் அதனை சிறிது நேரத்திலேயே எடிட் செய்த அவர், “ஃபெஞ்சல் புயல் மற்றும் 2023 ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான விவகாரங்களில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள் தவறானது குறித்து விசாரணை நடத்த மக்கள் வலியுறுத்த வேண்டும். நமது வரிப்பணத்தையே அவர்கள் ஊதியமாக பெறுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 பிரதீப் ஜான் கண்டனம்
கோவை: மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சந்தேக மரணம் - 4 பேர் பணியிடை நீக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com