கோவை மத்திய சிறைpt desk
தமிழ்நாடு
கோவை: மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சந்தேக மரணம் - 4 பேர் பணியிடை நீக்கம்
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நேற்று சந்தேக மரணம் அடைந்த நிலையில், கவன குறைவாக பணியில் இருந்ததாக 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: பிரவீண்
கோவை மத்திய சிறை பிளாக் 7ல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ஏசுதாஸ் என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். 2016 ஆம் ஆண்டு தண்டனை பெற்ற இவர், நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்த கோவை பந்தய சாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
கோவை மத்திய சிறை
இந்நிலையில், கூறாய்வு முடிவில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து சம்பவ நாளில் கோவை மத்திய சிறையில் பணியில் இருந்த துணை சிறை அலுவலர் மனோரஞ்சிதம், உதவி சிறை அலுவலர் விஜயராஜ், முதல் தலைமை காவலர் பாபுராஜ், முதல் நிலை காவலர் தினேஷ் ஆகிய 4 நால்வரையும் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.