தேனி|உச்சத்தை தொட்ட மின் உற்பத்தி; தினமும் 8 மணி நேரம் நிறுத்த முடிவு!
கண்டமனூர், காமாட்சிபுரம் சுற்றுப் பகுதிகளில் 400க்கும் அதிகமான காற்றாலைகள் இயங்குகின்றன.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, மே மாத இறுதியில் இருந்தே, பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அனைத்து காற்றாலைகளிலும் மின்சார உற்பத்தி கிடுகிடுவென உயர்ந்தது. காற்றாலைகளில் உற்பத்தித் திறனை பொறுத்து தினந்தோறும் அதிகபட்சமாக 36 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காற்றாலைகளிலும், ஒரு நாளில் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் பெருகி நீர்மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த சூழலில, காற்றாலைகளில் தினமும் 8 மணி நேரம் வரை, மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் காற்றின் வேகம் விநாடிக்கு 14 மீட்டர் அளவில் வீசி வருவதால், காற்றாலைகளின் மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.