சுனிதா, கல்பனா
சுனிதா, கல்பனாட்விட்டர்

டெல்லி முதல்வர் மனைவியுடன் ஹேமந்த் சோரன் மனைவி சந்திப்பு.. இருவரும் பேசியது என்ன?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் மனைவியுடன் ஹேமந்த் சோரன் மனைவி சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இவர்களுடைய சந்திப்பு குறித்து டெல்லி மாநில அமைச்சர் அதிசி, “ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தலைமை தாங்கும் தங்கள் கணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மத்திய ஏஜென்சிகளின் மிருகத்தனமான அதிகாரத்திற்கு பயப்படாத இரண்டு வலிமையான பெண்களின் இந்த வீடியோவை பார்க்கும்போது பாஜக பயப்பட வேண்டும். இந்த பெண்களின் வலிமை மற்றும் தைரியத்திற்காக நான் தலைவணங்குகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

சுனிதா கெஜ்ரிவாலைச் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், "ஜார்க்கண்ட்டில் 2 மாதங்களுக்கு முன் என்ன நிகழ்ந்ததோ, அதுதான் தற்போது டெல்லியில் நடந்திருக்கிறது. எனது கணவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதைப் போன்று அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையில் இருக்கிறார். சுனிதா கெஜ்ரிவாலைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்; துயரத்தை பகிர்ந்துகொண்டேன். எங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம்" என தெரிவித்தார்.

இதையும் படிக்க: பாஜகவில் இணைந்த சிவராஜ் பாட்டீல் மருமகள்.. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

சுனிதா, கல்பனா
டெல்லி: அமலாக்கத்துறை காவலில் இருந்தபடி அரசை இயக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் - பாஜக கடும் எதிர்ப்பு

சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

முன்னதாக டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 8 முறை சம்மன் அனுப்பியது. அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டார். பின்னர், மார்ச் 27ஆம் தேதியுடன் விசாரணைக் காவல் நிறைவடைந்த நிலையில், மார்ச் 28ஆம் தேதி மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஏப்ரல் 1 வரை விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தாலும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர், அங்கிருந்தபடியே துறைரீதியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனிதா, அரவிந்த் கெஜ்ரிவால்
சுனிதா, அரவிந்த் கெஜ்ரிவால்ட்விட்டர்

அவருக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா, ‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ என்ற வாட்ஸ் அப் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் நாளை (மார்ச் 31) I-N-D-I-A கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட I-N-D-I-A கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வழக்கறிஞர் மீது பொய்வழக்கு: குஜராத் Ex IPS அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி!

சுனிதா, கல்பனா
‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - வாட்ஸ் அப் எண்ணுடன் பரப்புரையை ஆரம்பித்தார் சுனிதா! அடுத்த ராப்ரிதேவி?

சிறையில் இருக்கும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்!

இது ஒருபுறமிருக்க மறுபுறம், சட்டவிரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன்மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத் துறை கடந்த 2022ம் ஆண்டு ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அவரை, கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்து செய்து சிறையில் அடைத்தது. முன்னதாக, அவருக்கு அமலாக்கத் துறை 7 முறை விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதல்வரானார். இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் பங்கேற்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிக்க: சந்தேஷ்காலி பாஜக வேட்பாளர்: விமர்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்.. புகார் அளித்த ரேகா பத்ரா!

சுனிதா, கல்பனா
“உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” - அரவிந்த் கெஜ்ரிவால் கைதில் ஐ.நா. கருத்து!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com