ஆண்டிபட்டி எம்எல்ஏவை கண்டித்து போஸ்டர்
ஆண்டிபட்டி எம்எல்ஏவை கண்டித்து போஸ்டர்pt

’மன்னிப்பு கேட்க வேண்டும்..’ திமுக எம்பி vs எம்எல்ஏ மோதல் சார்ந்து போஸ்டர்..!

தேனியில் திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் இடையே நடந்த மோதல், பூதாகரமாகி வருகிறது.
Published on

நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க நிகழ்ச்சியில், மேடையிலேயே மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் எம்.பி. தங்க தமிழ்ச்செல்வமும், எம்எல்ஏ மகாராஜனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து எம்எல்ஏ மகாராஜனை கண்டித்து ஆண்டிபட்டி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆண்டிபட்டி எம்எல்ஏவை கண்டித்து போஸ்டர்
”நலம் காக்கும் ஸ்டாலின்” | ’நிகழ்ச்சி பேனரில் படமில்லை’.. திமுக எம்.பி, எம்.எல்.ஏ இடையே வாக்குவாதம்!

போஸ்டரால் மீண்டும் சர்ச்சை..

ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் தங்க தமிழ்ச்செல்வனை, ஒருமையில் பேசிய மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி கிழக்கு மேற்கு ஒன்றிய மற்றும் பேரூர் கழக உடன்பிறப்புகள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே இந்த போஸ்டரை ஒட்டியது திமுகவினரா அல்லது மோதலை பெரிதுபடுத்த வேறு கட்சியினரின் சதியா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி எம்எல்ஏவை கண்டித்து போஸ்டர்
“சாதி சங்கங்கள் இருக்கு, சாதி மேட்ரிமோனியல் இருக்கு.. அப்ப எப்படி சாதி ஒழியும்” - புனிதப் பாண்டியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com