\
யூடியூபர் மதுமிதா
யூடியூபர் மதுமிதா instagram

பிரபல யூ-டூபர் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு!

நெல்லை பில்டிங் காண்ட்ராக்டரின் புகாரில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: 
Summary

நெல்லை பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து, பிரபல யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் நகை திருட்டு குற்றச்சாட்டில் புகார் அளித்தார். மதுமிதா இரட்டை அர்த்தங்களில் பேசி மிரட்டியதாகவும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்ததால், வழக்கை அங்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நெல்லை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து, பில்டிங் காண்ட்ராக்டர். இவர் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

முதுகுவலி சிகிச்சைக்காக நெல்லைக்கு அடிக்கடி பிசியோ தெரபி செய்ய செல்வது வழக்கம். அப்போது, நாகர்கோவில் தம்பத்துகோணம் பகுதியைச் சேர்ந்த மதுமிதா என்பவர் அறிமுகமானார். அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அவ்வப்போது மதுமிதா இரட்டை அர்த்தங்களில் பேசி வந்தார். இதனால் நான் அவருடன் செல்போனில் பேசுவதைத் தவிர்த்து வந்தேன்.

யூடியூபர் மதுமிதா
யூடியூபர் மதுமிதா instagram

இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு என்னை நெல்லை நீதிமன்றம் பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்திற்கு வருமாறும், தன்னை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது மதுமிதா எனது வாகனத்தில் ஏறினார். அதன் பிறகு என்னை பிசியோதெரபி செய்யச் செல்லுமாறு கூறினார்; ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன். பின்னர் அவரை நெல்லை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு எனது வீட்டிற்குச் சென்று பார்த்தேன். அப்போது எனது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இது பற்றி மதுமிதாவிடம் கேட்டபோது, உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டார். மேலும், இது தொடர்பாகப் புகார் செய்தால் தன்னை அவதூறாகப் பேசி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியதால், அப்போது புகார் அளிக்காமல் இருந்துவிட்டேன். தற்போது புகாரளிக்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேச்சிமுத்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தாலும், சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால், இந்த வழக்கை மேல் நடவடிக்கைக்காக நெல்லை மாவட்டத்திற்கு மாற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

பெண் யூடியூபரான மதுமிதா, கடந்த சில ஆண்டுகளாக பணம் மற்றும் நகைகளை வைத்து பல வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மதுமிதாவின் யூடியூப் வீடியோவை பார்த்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்புதான் அவரது வீட்டில் 118 பவுன் நகையை மர்மநபர் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை அடித்த வழக்கில் ஸ்ரீவைகுண்டத்தைசேர்ந்த இசக்கி பாண்டி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிட தக்கது.

யூடியூபர் மதுமிதா
இன்றும் நாளையும் வெளுக்கப் போகும் கனமழை.. சென்னைக்கும் வாய்ப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com