\
RAIN
RAINANI

இன்றும் நாளையும் வெளுக்கப் போகும் கனமழை.. சென்னைக்கும் வாய்ப்பு!

தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில், 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று (அக்.05) முதல் அக்.09 ஆம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று மற்றும் நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும், கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Rain
RainANI

மேலும், சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று மாலை அல்லது இரவு நேரங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிடைக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இக்காலக்கட்டத்தில் மீனவர்கள் குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com