குடிசை வீடுகள் எரிந்து நாசம்
குடிசை வீடுகள் எரிந்து நாசம்pt desk

பூந்தமல்லி | சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து - 9 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

பூந்தமல்லி அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 9 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது குடிசை வீடுகள் எரிந்து நாசமானது வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் மீது பட்டதில் குடிசை எரிய துவங்கியது ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்து இருந்த ஒன்பது வீடுகளில் பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி மதுரவாயல் அம்பத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். எனினும் தீ விபத்தில் ஒன்பது வீடுகளில் இருந்த உடைமைகள் முழுவதும் எரிந்து நாசமானது குறிப்பாக கல்லூரி மாணவி ஒருவரின் ஹால் டிக்கெட் புத்தகங்கள் உள்ளிட்டவை தீக்கிரையானது..

குடிசை வீடுகள் எரிந்து நாசம்
30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறோம்.. செய்தியாளர் சந்திப்பில் உளறிய பாக். அமைச்சர்!

சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருள், தினகர், சுகுணா, லிங்கேஷ், முருகா, வேலு, பழனி, சரவணா, தமிழரசன் உள்ளிட்ட ஒன்பது பேரின் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் பூந்தமல்லி வட்டாட்சியர் சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆறுதல் கூறி தற்காலிகமாக மீட்டு மாற்றி இடத்தில் தங்க வைத்துள்ளனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com