Khawaja Asif
Khawaja Asifweb

30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறோம்.. செய்தியாளர் சந்திப்பில் உளறிய பாக். அமைச்சர்!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இழிவான வேலையை அமெரிக்காவுக்காகவும் ஐரோப்பிய நாடுகளுக்காகவும் கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருவதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published on

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா வெளியிட்ட அறிவிப்புகளுக்கு எடுக்கப்படும் பதில் நடவடிக்கைகள் குறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேட்டியளித்தார்.

30 ஆண்டாக பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம்..

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் நாடு என்ற பெயர் பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாகவே உள்ளதே என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கவாஜா ஆசிஃப், அமெரிக்காவுக்காகவும் ஐரோப்பாவுக்காகவும் கடந்த 30 ஆண்டுகளாகவே இந்த இழிவான வேலையை செய்து வருவதாக
தெரிவித்தார். ஆனால், தான் கூறியதன் தீவிரத்தன்மையை உணர்ந்துகொண்ட அமைச்சர், அப்படி செய்வது தவறு என்றும் இதற்கான பலனைத்தான் அனுபவிப்பதாகவும் கூறினார்.
பஹல்காம் தாக்குதலை இந்தியா திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com