\
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகைமுகநூல்

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்; முழு விவரம்!

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
Published on: 

2025 ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று பொங்கல் பண்டிகையும், அதற்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல் பண்டிகையும், 16ஆம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வேPT

ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் இன்றும், 11ஆம் தேதிக்கு பயணம் செய்ய நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 14ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்புவோர் வரும் 15ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை
சென்னை | எண்ணெய் கசிவுக்கு விடிவுகாலம் பிறக்குமா? ஏக்கத்துடன் காத்திருக்கும் எண்ணூர் வாசிகள்!

irctc இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு வழக்கதை விட முன்பே தொடங்குகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com