பிரதமர் தொடங்கி விஜய் வரை... முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவினரால் வாழ்த்தரங்கம், கவியரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி:
” தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் ”
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி:
” முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் ரஜினி:
”72ஆவது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்:
” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.”
பாஜக அண்ணாமலை:
” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி
” எனது சகோதரரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி மதிப்புகளை பாதுகாக்க நாங்கள் இணைந்து நிற்போம்; முதல்வர் ஸ்டாலின், நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.”