சென்னையில் அதிகருக்கும் கும்பல் திருட்டு
சென்னையில் அதிகரிக்கும் கும்பல் திருட்டுweb

’சென்னையில் நவோனியா கும்பல்..’ மக்களே உஷார்.. எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை!

சென்னையில் நவோனியா கும்பல் என்ற தொழில்முறை திருடர்கள் அதிகம் உளாவுவதால் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற கூட்டம் கூடிய இடங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ரயில்வே பாதுகாப்பு மற்றும் இரும்பு பாதை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காரணம் என்ன ? விரிவாகப் பார்க்கலாம்.

நவோனியா கும்பல் என்றால் யார்?

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் ரயில்களில் சர்வ சாதாரணமாக செல்போனை திருடி செல்லும் வட மாநில நபர்களின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள காவல்துறையினர் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்திருக்கின்றனர். அந்த சிசிடிவி காட்சிகளில் இருப்பது தொழில்முறை திருட்டுகளில் ஈடுபடும் நவோனியா கும்பல் எனவும், அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவும் காவல்துறையினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மொபைல் போன் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை (RPF), தமிழ்நாடு ரயில்வே போலீஸ் (GRP) மற்றும் உள்ளூர் காவல் துறைகள் இணைந்து “நாவோனியா கும்பல்” (Naonia Gang) எனப்படும் தொழில்முறை திருடர்களைக் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.

திருட்டு
திருட்டு

இந்த நவோனியா கும்பல் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கைகளில் துண்டு, கைக்குட்டை அல்லது செய்தித்தாள் போன்றவைகளைப் பயன்படுத்தி பொருட்களை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்கள் பொதுவாக 2 முதல் 3 பேர்கள் கொண்ட சிறிய குழுக்களாக செயல்படுகின்றனர். சில நேரங்களில் சிறுவர்களையும் பயன்படுத்துவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவோனியா கும்பல் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்படுவதால், இவர்களை கண்டறிதலும் கண்காணிப்பதும் மிகவும் கடினம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அதிகருக்கும் கும்பல் திருட்டு
SIR | "ஆதார் அட்டையை 12வது ஆவணமாக ஏற்க வேண்டும்" - தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

காவல்துறை எச்சரிக்கை..

இவர்கள் சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபடுவதை அறிந்த காவல்துறையினர் இது குறித்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் மெரினா கடற்கரையில் சுற்றித்திரிந்த ஒரு நபரை பிடித்து, பின்னர் அவர்கள் தொடர்புடைய கூட்டாளிகளையும் கைது செய்தனர். ஒரு சிறுவர் உட்பட நான்கு நபர்களை கைது செய்துள்ள ரயில்வே காவல்துறையினர், மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஜார்கண்ட் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களிடமும் இன்னும் யார் யார் இருக்கிறார்கள். இதுவரை எங்கெங்கு எத்தனை திருட்டில் ஈடுபட்டுள்ளனர் ? அவர்களின் திட்டம் என்ன ? என்பது தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் அதிகருக்கும் கும்பல் திருட்டு
”பஞ்சாப் அணியில் என்னை அவமதித்தார்கள்.. மனமுடைந்து அழுதேன்” - கசப்பான அனுபவத்தை பகிர்ந்த கெய்ல்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com