அண்ணாமலை
அண்ணாமலைpt web

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Published on

திருச்சியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தென்னூர் அரசமரம் பேருந்து நிறுத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், இரவு 10 மணிக்கு மேல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி தில்லை நகர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட 700 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com