சதீஷ்குமார்
சதீஷ்குமார்pt

ராணிப்பேட்டை| மரம் ஏறும்போது தவறிவிழுந்த 26 வயது போலீஸ்; மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம்

ராணிப்பேட்டையில் ஏறும்போது தவறி விழுந்ததில் மூளை சாவு ஏற்பட்ட 26 வயது காவலரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அய்யம்பேட்டைச்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் - தமயந்தி மகன் சதீஷ்குமார்(26). இவர் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 7ம் தேதி தனது வீட்டில் மரம் ஏறிய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.

அப்போது, பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது. தனது மகனின் நிலையை கண்ட துயரத்திலும், அவரது பெற்றோர்கள் சதீஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

சதீஷ்குமார்
மதுரை | கோவில் சென்றுவிட்டு திரும்பியபோது நேர்ந்த கொடூரம்; குழந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு #Video

இதனைத்தொடர்ந்து, அவரது இதயம் சென்னைக்கும், சிறுநீரகம், கண்கள் ஆகியவை சி.எம்.சி.மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன.

தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியில் இருந்த சதீஷ்குமார் உயிரிழந்தாலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள சம்பவம் சக காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறந்த காவலரின் குடும்பத்தாரை அனைவரும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

சதீஷ்குமார்
“மீண்டும் மோடி வந்தால் இந்திய வரைபடமே மாறும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com