மதுரை | கோவில் சென்றுவிட்டு திரும்பியபோது நேர்ந்த கொடூரம்; குழந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு #Video

மதுரை திருமங்கலம் அருகே சாலை ஓரம் சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து... டூவீலரில் சென்றவர், காரில் சென்ற குழந்தை உட்பட மொத்தமாக 5 பேர் உயிரிழப்பு. விபத்து தொடர்பான அசிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியானது.
accident in madurai
accident in maduraipt

செய்தியாளர் - சுபாஷ்

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை தளவாய்புரத்திலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கனகவேல் ஓட்டி வந்த கார் திருமங்கலம் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி சாலை ஓரமாக தனது டூவீலரில் சென்றார்.

accident in madurai
“தேர்தல் சீசனுக்கு மட்டும் வந்து செல்வதற்கு தமிழ்நாடு என்ன சரணாலயமா?” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அப்போது காரில் வந்து கொண்டிருந்த கனகவேல் டூவீலர் மீது மோதாமல் இருக்க, காரை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் காரோ, டூவீலர் மீது அதிவேகமாக மோதி நடுவே இருந்த தடுப்புச் சுவரில் தூக்கியெறியப்பட்டது. இதில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த கனகவேல் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, உறவினர் நாகஜோதி மற்றும் ஒரு குழந்தை ஆகிய நான்கு பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கொய்யாப்பழ வியாபாரி பாண்டியும் உயிரிழந்தார்.

தொடர்ந்து இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து தொடர்பான பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

accident in madurai
சென்னை : வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 8 பேர் அதிரடி கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com