\
யூடியூபர் மதுமிதா
யூடியூபர் மதுமிதா instagram

பகிரங்கமாக சிக்கிய YouTuber மதுமிதா? 5 சவரன் நகை பறிப்பு புகார்! 4 ஆண்டுக்கு பிறகு பகீர்!

பிரபல பெண் YouTuber மதுமிதா மீது 5 பவுன் நகை பறிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Published on: 
Summary

பிரபல யூடியூபர் மதுமிதா மீது திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சவரன் நகை பறிப்பு தொடர்பான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதுமிதா. 28 வயதான இவர், தனது YouTube சேனலில் வீடியோ வெளியிட்ட, சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார். மசாஜ் பார்லர்களை இவர் நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில், தனது வீட்டில் உள்ள நகை மற்றும் பணம் தொடர்பாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த அவரது ஃபாலோவர் ஒருவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, வீட்டில் இருந்த 118 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4பேரை கைது செய்ததோடு, 98 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மதுமிதா மீது பரபரப்பு நகை பறிப்பு புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர், பெண் YouTuber மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

Youtuber Madhumitha
Youtuber MadhumithaPT

இந்த புகார் தற்போது பாளையங்கோட்டை காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரில், கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று, நெல்லை நீதிமன்றம் அருகே, மதுமிதாவை சந்தித்தேன். எனக்கு மசாஜ் செய்வதற்காக, என்னுடைய காரில் அவரை அழைத்து சென்றேன். அப்போது, காரில் ஏறிய அந்த பெண், திடீரென என்னுடைய கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டார்.

அதனை திருப்பி கேட்டபோது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி, உன்னை அசிங்கப்படுத்துவிடுவேன் என்று மிரட்டினார். அவரது மிரட்டலுக்கு பயந்து, அப்போது நான் புகார் அளிக்கவில்லை. தற்போது மதுமிதா தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இவரது இந்த புகாரை ஏற்று, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இன்னும் சில நாட்களில் சம்மன் அனுப்பி, மதுமிதாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

யூடியூபர் மதுமிதா
பிரபல யூ-டியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com