போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு | நடிகர் ஸ்ரீகாந்த் கைது!
தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத், தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. அதன் முடிவில் ஸ்ரீகாந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து 'தீக்கிரை' எனும் படத்தை மூன்று தயாரிப்பாளர்களுள் ஒருவராக பிரசாத் தயாரித்து வந்துள்ளார். அத்திரைப்படம் தொடர்பான பார்ட்டியில் பிரசாத், ஸ்ரீகாந்துக்கு கொகைன் வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கோகைன் போதைப் பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.