கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த விவகாரம் : மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த விவகாரம் : மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த விவகாரம் : மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு
Published on

சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதன் தவறு காரணமாக, சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கவனக்குறைவாக மருத்துவம் பார்த்து பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகாசி ஊழியர்கள் மீதும் சாத்தூர் நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

முன்னதாக, விருதுநகரில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டு, அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

தனக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களே காரணம் என கர்ப்பிணி தெரிவித்திருந்தார். கடந்த 3ஆம் தேதி தன்னை பரிசோதித்த மருத்துவர், தனக்கு ரத்தம் குறைவாக இருப்பதாகக் கூறி, சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில், ரத்தம் வாங்கி வரச் சொன்னதாகப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் சிவகாசி ரத்த வங்கியில் தனது கணவர் ரத்தம் வாங்கி வந்ததாகவும், அன்றைய தினமே தனக்கு ரத்தம் செலுத்தப்பட்டதாகவும் கர்ப்பிணி கூறியிருந்தார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு சாத்தூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். அரசு மருத்துவர்கள் தங்களின்‌ அலட்சியத்தால், தன் வயிற்றில் இருக்கும் 9 மாத சிசுவின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிட்டனர் என்றும், ஹெச்.ஐ.வி தொற்று பரவ காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையிலேயே தற்போது மருத்துவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com