தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்Pt web

திருப்பரங்குன்றம் | தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர்., எச். ராஜா உட்பட 12 மீது வழக்குப்பதிவு.!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை அகற்ற வேண்டும் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய குழு உறுப்பினர் எச். ராஜா உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Published on

திருப்பரங்குன்றம் மலை மீது கடந்த-21ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழாவிற்காக சிக்கந்தர் பாஷா தர்கா சார்பாக கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் வளர்பிறைக் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிலையில், நேற்று, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரம் இருக்கும் பகுதிக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் செல்ல முற்பட்டனர். அப்போது, அதற்கு காவல்துறையினர் 'அங்கு செல்ல அனுமதி இல்லை' எனக் கூறி தடுத்து நிறுத்தினர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்pt web

இதனால், காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, மரத்தில் உள்ள கொடியை அகற்றக்கோரி 3 மணி நேரத்திற்கு மேலாக திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் அமர்ந்து எச். ராஜா உட்பட பாஜகவினர் தர்ணா போராட்டத்தின் ஈடுபட்டனர். இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட 12 பேரை திருப்பரங்குன்றம் காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்த நிலையில், அவர்கள் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
”தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள்” - அமைச்சர் சேகர் பாபு.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com