பாம் சரவணன்முகநூல்
தமிழ்நாடு
காலிலேயே சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி பாம் சரவணன்! என்ன நடந்தது? யார் இவர்?
பிரபல ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளி பாம் சரவணன் போலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் தலைமறையாக இருந்த நிலையில் "ரௌடிகள் ஒழிப்பு நுண்ணறிவிப்பு பிரிவு" போலீசார் இன்று பாம் சரவணனை கைது செய்து அவரிடமிருந்து வெடிகுண்டை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், சென்னைக்கு அழைத்து வரும்போது ஆந்திர - சென்னை எல்லைப் பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.
பாம் சரவணன்
காலில் சுடுபட்ட ரவுடி பாம் சரவணன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர். பிரபல ரவுடி வெள்ளை உமா கொலை வழக்கு உள்ளிட்ட ஆறு கொலை வழக்குகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தாமரைப்பாக்கம் கூட்ரோட்டில் 2015 கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளரும், பிரபல ரவுடியுமான தென்னரசுவின் தம்பி தான் காலில் சுட்டு பிடிபட்ட ரவுடி பாம் சரவணன் ஆவார்.