\
"இது தீப்பிடித்த காடு, பறவைகளே பத்திரம்"- மக்களை எச்சரிக்கும் வைரமுத்து

"இது தீப்பிடித்த காடு, பறவைகளே பத்திரம்"- மக்களை எச்சரிக்கும் வைரமுத்து

"இது தீப்பிடித்த காடு, பறவைகளே பத்திரம்"- மக்களை எச்சரிக்கும் வைரமுத்து
Published on: 

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் பல்வேறு வகையான தளர்வுகளுடன் எட்டாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் எளிதாக வெளியூர்களுக்குச் செல்வதற்கான வசதி ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி மக்களுக்கு ட்விட்டரில் ஆலோசனை தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. "ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக் கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே" என்று கூறியுள்ள அவர், "இது தீப்பிடித்த காடு பறவைகளே! பத்திரம்" என்றும் அக்கறையுடன் எச்சரித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com