\
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு
Published on: 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் நீதிமன்ற உத்தரவின்படி தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

போயஸ் தோட்டத்திலுள்ள வேதா நிலைய இல்லத்தை ‘அரசுடைமையாக்கியது செல்லாது’ என்ற நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அந்த இல்லத்தின் சாவியை விரைந்து தங்களிடம் ஒப்படைக்குமாறு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக் மற்றும் ஜெ.தீபா, சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இவர்களின் கோரிக்கைக்கு, அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் பதில் அளித்திருந்தார். இந்நிலையில், போயஸ் கார்டனிலுள்ள ஜெயலலிதா இல்லத்தின் சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று ஒப்படைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com