ஆல்-பாஸ் ரத்து செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய தலைமுறை

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆல்-பாஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரம்: “மிகவும் தவறான முடிவு” - ராமதாஸ்

“மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” - பாமக நிறுவனர் ராமதாஸ்
Published on

நேற்று மத்திய அரசு, “5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக் கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரோமோட் செய்யப்பட மாட்டார்கள்” என தெரிவித்திருந்தது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்கோப்புப்படம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர், “மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.

ஆல்-பாஸ் ரத்து செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
5 To 8 ஆம் வகுப்பு ஆல் பாஸ் | குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்பில் மகேஸ் அறிக்கை!

மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். 5 அல்லது 8-ஆம் வகுப்பில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாவிட்டால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள். அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதற்காகத் தான் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. அதைக் கண்டித்து அந்த ஆண்டுட ஜனவரி 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாமகவுடன் பேச்சு நடத்திய அன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஆல்-பாஸ் ரத்து செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
கூட்ட நெரிசலில் ரசிகை உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம்!

கிராமப்புற ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது எனக்கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “கல்வி உரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது. தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com