central govt education evaluation system react in tamilnadu minister anbil mahesh
அன்பில் மகேஸ்புதிய தலைமுறை

5 To 8 ஆம் வகுப்பு ஆல் பாஸ் | குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்பில் மகேஸ் அறிக்கை!

”கல்வி உரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்” எனப் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
Published on

5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக் கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுவதாகவும், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும், அதிலும் மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரோமோட் செய்யப்பட மாட்டார்கள் எனவும், 5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்” எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது.

central govt education evaluation system react in tamilnadu minister anbil mahesh
“மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் தருகின்றனர்” - அமைச்சர் அன்பில் மகேஸ்

தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாமல், நமது மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில்கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ் புதிய தலைமுறை

தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனவே தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

central govt education evaluation system react in tamilnadu minister anbil mahesh
10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com