"தமிழகத்தில் சனாதனத்தை விட பெரிய பிரச்சனைகள் நிறைய இருக்கு" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் பேசுவதற்கு இருக்கும் போது சனாதனம் முக்கியமில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் பாமக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்து கலந்துரையாடினார்.

பாமக கூட்டம்
பாமக கூட்டம்

கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான உபரிநீர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். அப்போது தமிழகத்தில் பேசுபொருளாக இருக்கும் சனாதனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அதற்கு பதிலளித்து பேசிய அவர், “சனாதனம் என்பது முக்கிய பிரச்சினை இல்லை. தொழில், வேலை வாய்ப்புகள் இல்லை, நீர்பாசன திட்டங்கள் என நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப்பற்றி பேசலாம்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com