மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உதவி!

நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிவாரண உதவிகளை வழங்கினார். அந்தக் காட்சிகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தனித்தீவுகளாக காட்சியளித்தன.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இதுவரை இல்லாத வகையில் தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழையால் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவர்களாக நியமிக்கப்பட்டு மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கண்காணிக்கப்பட்டன.

தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அனுப்பப்பட்டு மீட்புப்பணிகள் நடந்துவருகின்றன. முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு நிவாரண நிதிகளாக ரூ.6000, ரூ.1000 அறிவிக்கப்பட்டுள்ளன.

அன்புமணி ராமதாஸ்
மழை வெள்ள நிவாரணம்; அரசாணை வெளியிட்டது அரசு

இந்நிலையில் தான் அதிகனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிவாரண உதவிகளை வழங்கினார்.

ராஜகோபாலபுரம் பகுதியில் ஆய்வுமேற்கொண்ட ராமதாஸ், மக்களிடம் பாதிப்புகளை கேட்டுக்கொண்டு அரிசி, பருப்பு, பாய் உள்ளிட்ட அடிப்படை பொருட்களை வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com