தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்
தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்web

தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்.. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு?

பிப்ரவரி 25ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published on
Summary

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக-பாஜக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 25ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய வரவாக வருகை தந்திருக்கும் தவெக கட்சி கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என அறிவித்தபோதும் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. அதேபோல ஆளுங்கட்சியான திமுகவை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் இருக்கும் அதிமுக, பாஜக, பாமக அன்புமணி தரப்பு, அமமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் இணைத்துள்ளது. இக்கூட்டணியில் தேமுதிகவும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Edappadi K Palaniswami react on tvk leader vijay aidmk criticism
எடப்பாடி பழனிசாமி, விஜய்புதிய தலைமுறை

நாம் தமிழர் வழக்கம் போல தனித்து நிற்கும் முடிவில் இருக்கிறது. இந்தசூழலில் இந்த மாதம் இறுதியில் தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் தேர்தலுக்கான தேதியை உறுதிசெய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்
முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த அதிமுக.. 1977 சட்டமன்றத் தேர்தலின் பின்னணி!

சட்டமன்ற தேர்தலுக்கான தயார்நிலையை ஆய்வு செய்ய தலைமைதேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

25ஆம் தேதி சென்னை வரும் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல்ஆணையர்கள் குழு, அடுத்தடுத்த நாட்களில் மாநில தேர்தல் அதிகாரிஉள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பல்வேறு துறைஅலுவலர்கள், மாவட்ட தலைமை தேர்தல்அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகளுடன், தனித்தனியே ஆலோசனை நடத்துகிறது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனைweb

இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்தேதி, மார்ச் மாதத்தின் முதல் வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்
மார்ச் 16-ல் மாநிலங்களவைத் தேர்தல்.. தமிழ்நாட்டில் 6 பேரின் பதவிக்காலம் நிறைவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com