தேர்தல் 2024 | பாமக பிரசார வாகனம் வழியே சென்ற துரைமுருகன்... அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்!

“எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. நான்தான் வெற்றி பெற்று விடுவேன்” - பாமக பிரசார வாகனம் வழியே சென்ற அமைச்சர் துரைமுருகனிடம் கூறிய பாமக வேட்பாளர் பாலு.
பாலு - துரைமுருகன்
பாலு - துரைமுருகன்புதிய தலைமுறை

செய்தியாளர் - ச.குமரவேல்

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாலு வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டிருந்தார்.

பாலு - துரைமுருகன்
பாலு - துரைமுருகன்

அப்போது அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனை ஆதரித்து பரப்புரை செய்தார் அமைச்சர் துரைமுருகன்.

பாலு - துரைமுருகன்
“ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலைப்பாடு; நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக” - இபிஎஸ் விமர்சனம்

அமைச்சர், பரப்புரை முடித்து அவ்வழியாக வந்தபோது, அவரை பார்த்த வேட்பாளர் பாலு, “எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. நான்தான் வெற்றி பெற்று விடுவேன். எனக்காக நீங்கள் வந்ததற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நான் வெற்றி பெற்றவுடன் உங்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

இதனால் அப்பகுதியில் ஒரு கலகலப்பான சூழல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து துரைமுருகன் காரில் இருந்து இறங்க முயன்றார். அதைக்கண்ட திமுக தொண்டர்கள், ‘ஒன்றுமில்லை ஒன்றுமில்லை’ என்று சொல்லி அமைச்சரை காரில் அமர வைத்து சென்று விட்டனர்.

பாலு - துரைமுருகன்
பாஜக Vs காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை ஒப்பீடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com