Minister Mano thangaraj
Minister Mano thangarajpt desk

"மோடியின் செல்வாக்கு சரிந்து தேசிய அளவில் பாஜக கேள்விக் குறியாகியுள்ளது" – அமைச்சர் மனோ தங்கராஜ்!

மோடி மீடியா கணிப்பை தவிடு பொடியாக்கி உள்ளது மக்கள் தீர்ப்பு என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: நவ்பல் அஹமது

நாகர்கோவிலில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய தலைமுறைக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர்... மோடி மீடியா கணிப்பை தவிடு பொடியாக்கி உள்ளது மக்கள் தீர்ப்பு, நாற்பதும் நமதே நாடும் நமதே என தலைவர் கூறினார். 40-ம் கிடைத்துள்ளது. நாடும் நம்வசம் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

Minister mano thangaraj
Minister mano thangarajpt desk

கண்ணுக்கெட்டும் தொலைவிற்கு திமுகவை எதிர்க்கும் திராணி உள்ளவர்கள் யாரும் இல்லை என்பதை இந்த தேர்தல் காட்டி காட்டுகிறது. தேசிய அளவில் பாஜக கேள்விக் குறியாகியுள்ளது. வாரணாசியில் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோடி, தற்போது ஒன்றரை லட்சம் வாக்கு என சரிந்துள்ளார்,

Minister Mano thangaraj
பாஜகவின் அஸ்திரத்தை தவிடுபொடியாக்கிய மக்கள் ! அயோத்தியில் பாஜக தொடர்ந்து பின்னடைவு...

மேய்ப்பர் இல்லாத ஆட்டு மந்தையாக அதிமுக, தலைமைத்துவமோ, கொள்கையோ இல்லாததால் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அகில இந்திய தலைவர், சிறந்த பேச்சாளர்கள், சிறந்த தலைவர்கள் கொள்கை பற்றாளர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளனர். எனவே இந்தமுறை ஆரோக்கியமான நாடாளுமன்றம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com