பாஜகவின் அஸ்திரத்தை தவிடுபொடியாக்கிய மக்கள் ! அயோத்தியில் பாஜக தொடர்ந்து பின்னடைவு...

அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 42 தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக
பாஜகபுதியதலைமுறை

இந்தியா முழுவதும் காலை எட்டு மணியில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் I.N.D.I.A. கூட்டணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 42 தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக, மோடி
பாஜக, மோடிட்விட்டர்

இம்மாநிலத்தின் பெரும்பான்மை, மத்தியில் ஆட்சி மாற்றத்தையே உண்டாக்கும் வாய்புள்ளதால் பாஜக உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற பல பல முயற்சிகளை செய்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோவிலை பிரம்மாண்டமாகக் கட்டியது பாஜக அரசு. தொடர்ந்து தனது பிரசாரங்களிலும் பாஜக தலைவர்கள் அயோத்தி ராமர் கோயிலை முன்னிலை படுத்தி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

பாஜக
ஒடிசா| ஆட்சியை இழக்கிறாரா நவீன் பட்நாயக்.. அரியணை ஏற தயாராகும் பாஜக! 70 இடங்களுக்கு மேல் முன்னிலை

மிக முக்கியமாக, சரியாக தேர்தல் சமையத்தில்... முழுதாக கட்டி முடிக்கப்படாத அயோத்தி ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்து, பிரசாரம் முழுவதும் ராமர் கோவில் கட்டியதைப் பற்றியே செய்தது பாஜக. “ராகுல் காந்தி ஜெயித்துவிட்டால் மீண்டும் ராமர் கோயிலை மூடி விடுவார். ராமர் மீண்டும் குடிசைக்கு போய்விடுவார்” என்றும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் மோடி.

இவை எல்லாவற்றுக்கும் பிறகும், உ.பி.யில் பின்னடைவை சந்தித்துள்ளது பாஜக. அதிலும் குறிப்பாக பாஜகவால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத் 538139 வாக்குகள் (மாலை 5.30 மணி நிலவரப்படி) பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட லாலு சிங் 482917 வாக்குகள் பெற்றுள்ளார். சமாஜ்வாடி கட்சி 55222 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

அயோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில்

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 49 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக எம்பி லாலு சிங் இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக-வின் பெரும் நம்பிக்கையான ராமர் கோயில் உள்ள தொகுதியிலேயே பாஜக பின்னடைவை சந்தித்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com