\
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிமுகநூல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை?

உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Published on

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். புழல் சிறையில் இருக்கும் அவருக்கு உடல்நலக்குறைவு (அடிக்கடி கார் மரத்துப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்) ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கூடுதல் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

செந்தில் பாலாஜி
“கலெக்டருக்கு படிக்கிறீங்களா? படிக்க வைக்கிறேன்...” - உயிரிழந்த விவசாயியின் மகளிடம் கேட்ட விஷால்!
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிகோப்புப்படம்

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இதயவியல் சிறப்பு மருத்துவர் தலைமையிலான குழு, செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com