“கலெக்டருக்கு படிக்கிறீங்களா? படிக்க வைக்கிறேன்...” - உயிரிழந்த விவசாயியின் மகளிடம் கேட்ட விஷால்!

திருச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி ஒருவரின் மகளை படிக்க வைப்பதாக நடிகர் விஷால் உறுதி அளித்துள்ளார்.

நடிகர் விஷால் நடித்து வரும் படத்திற்கான படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நடிகர் விஷாலை சந்தித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த விவசாயி செல்வகுமாரின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து நடிகர் விஷால் ஆறுதல் தெரிவித்தார்.

Actor Vishal
Actor Vishalpt desk

அப்போது விவசாயியின் மகளிடம் நன்றாக படிப்பீர்களா என கேள்வி எழுப்பிய நடிகர் விஷால், ஆட்சியராக விரும்பினால் படிக்க வைக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக விவசாயி குடும்பத்தினருக்கு உணவளிக்க வலியுறுத்திய நடிகர் விஷால், அவர்களுக்கு சந்திப்புக்கு முன்னதாகவே உணவு வழங்காத உதவியாளரிடம் கடிந்து கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com