
📷kavin
சென்னையில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்வர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தொல்காப்பிய பூங்கா 42 கோடியே 45 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
2011ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியால், 58 ஏக்கர் பரப்பளவில் தொல்காப்பியப் பூங்கா திறக்கப்பட்டது. அதன் பின் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொல்காப்பியப் பூங்காவை மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி மூலம் பூங்காவின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடை மேம்பாம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிஎஸ் தினகரன் சாலையின் குறுக்கே குழாய் கால்வாய்க்கு மாற்றாக , மூன்று வழி பெட்டக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.