\
பாதிக்கப்பட்ட பாமக நிர்வாகி
பாதிக்கப்பட்ட பாமக நிர்வாகிpt web

திருநெல்வேலி - பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு - போலீஸ் விசாரணை.!!

திருநெல்வேலியில் பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர் மருதுபாண்டி

திருநெல்வேலி மாநகர் கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவர் பாமக நிர்வாகியாக உள்ளார். இவர் தனது சொந்த ஊரான மேல பாட்டம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் பணிகளை மேற்கொண்டு இருந்தபோது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பலானது இவர் மீது பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளார்கள்.

நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் அங்கிருந்து தப்பிய செல்லப்பா, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கை கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிய அளவு காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையாக அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் நிலத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com