’இதுதான் காரணம்’ - ஆளுநர் மாளிகை நுழைவாயிலில் பெட்ரோல் குண்டுவீசிய நபர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

“மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்” அண்ணாமலை
ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகைpt web

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் வாசலில் கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ரவுடி கருக்கா வினோத்தை சுற்றிவளைத்து கைது செய்து கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகைPT

3 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள கருக்கா வினோத், தனக்கு சிறையில் இருந்து வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், அதன் காரணமாக ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், விசாரணையில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

யாரிந்த கருக்கா வினோத்?

கருக்கா வினோத் ஏற்கனவே 2015 ம் ஆண்டு தி.நகர் சவுத் போக் சாலையில் டாஸ்மாக் கடையில் எரியும் துணியை உள்ளே தூக்கிபோட்டு பின் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை டாஸ்மாக்கினுள் ஊற்ற டாஸ்மாக் கடை முழுவதும் எரிந்து ஊழியருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

2017 ம் ஆண்டு கருக்கா வினோத் இரு சக்கர வாகனத்தில் வந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைதானார். அப்போது தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி ஒருவர் "போலீசார் நம்மை வாழவிடமாட்டார்கள். அவர்களுக்கு நம் மேல் பயம் வரவேண்டும்" எனக்கூறி பணம் கொடுத்து பெட்ரோல் வெடிகுண்டு வீசச்செய்ததும், அதன் பேரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதும் தெரியவந்தது.

கடந்த 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசினார்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது.. சென்னையில் பரபரப்பு

இதற்கிடையே, ஆளுநர் மாளிகை நுழைவாயில் அருகே, கிண்டி உதவி காவல் ஆணையர் சிவா உடன் ஆளுநரின் செயலாளர் கிரிலோஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அண்ணாமலை
அண்ணாமலை

குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்

ஆளுநர் மாளிகையின் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, “ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கு என்ன என்பதை பிரபலிக்கிறது முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்; இந்த தொடர் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை
“தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு”- லோகேஷை பாலஸ்தீன போருக்கு அழைக்கும் மன்சூர் அலிகான்

ஆளுநருக்கே பாதுகாப்பில்லை

மத்திய அமைச்சர் எல்.முருகனும் இவ்விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதை காட்டுகிறது, சட்டத்தின் உட்சபட்ச அதிகாரம் படைத்தவராக மாநிலத்தில் ஆளுநர் உள்ளார். ஆளுநருக்கே பாதுகாப்பில்லாத சூழல் தான் தமிழ்நாட்டில் உள்ளது. இதனால் சாதாரண மனிதனின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

தமிழ்நாடு அரசாங்கம் முற்றிலும் தோற்றுப்போன அரசாங்கமாக இருக்கிறது. இச்சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும். கமலாலயத்தில் குண்டு வீசிய போதே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இச்சம்பவம் இன்று நடந்திருக்காது” என தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பொறுப்பு வகிக்கும் ஆளுநர் குடியிருக்கும் மாளிகையின் நுழைவாயிலின் முன்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது கண்விழித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துவதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com