பெரம்பலூர்: ”எங்களுக்கு பெருமகிழ்ச்சி” தூய்மை பணியாளர்களை கௌரவித்த பொங்கல் கொண்டாட்டம்!!

புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பெரம்பலூரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொங்கல் கொண்டாட்டம்
பொங்கல் கொண்டாட்டம்புதிய தலைமுறை

புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பெரம்பலூரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அரும்பாவூர் பேரூராட்சியில் பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைபணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டதுடன், அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் சங்க நிர்வாகிகளும் தூய்மை பணியாளர்களும் இணைந்து சர்க்கரை மற்றும் வெண்பொங்கல் வைத்தனர்.

புதிய தலைமுறை அறக்கட்டளை, பெரம்பலூர் விக்டரி லயன் சங்க நிர்வாகிகள் சார்பில் பேரூராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பாக சில்வர் பொங்கல்பானை, பொங்கல் அரிசி, வெல்லம், பாசிபருப்பு, கரும்புடன் பெண்களுக்கு சேலையும் ஆண்களுக்கு ஆடையும் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

பொங்கல் கொண்டாட்டம்
"மாணவர்கள் சார்பாக நன்றி சொல்றேன்மா" மகள் நினைவாக சொத்தை தானம் செய்த தாயிடம் அமைச்சர் நெகிழ்ச்சி

வறுமையின் காரணமாக பொங்கலே கொண்டாடிடாத பலரும் இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், “ சமூகத்தில் தங்களை பலரும் ஏளனமாக பார்க்கும் நிலையில் பல்வேறு வேதனையான சூழல்களை கடந்து பணியாற்றும் எங்களை கௌரவித்து விழா கொண்டாடியது பெருமகிழ்ச்சி அளித்துள்ளது. அனைவருக்கும் எங்களது பொங்கல் வாழ்த்தையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.”என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com