காந்தி ஜெயந்தியை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு கள் படைக்க வந்த கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழகத்திலும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதனிடையே காந்தி ஜெயந்தியை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு கள் படைக்க வந்த கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது கள் போதைப்பொருள் அல்ல, அதனை இறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.