\
ஸ்டான்லி மருத்துவமனை
ஸ்டான்லி மருத்துவமனைமுகநூல்

சென்னையில் மற்றொரு சம்பவம் | மனநல மருத்துவரை தாக்கிய நோயாளி மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவரை தாக்கியவர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்
Published on

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவரை தாக்கியவர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மனநல மருத்துவராக பணியாற்றி வரும் ஹரிஹரன் என்பவரை சிகிச்சையில் இருந்த நோயாளி ஒருவர் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி வண்ணாரபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஸ்டான்லி மருத்துவமனை
மீண்டும் அதிர்ச்சி! சென்னையில் தாக்கப்பட்ட மற்றொரு அரசு மருத்துவமனை மருத்துவர்! நடந்தது என்ன?

இது தொடர்பாக திருவான்மியூரைச் சேர்ந்த பரத் என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஒரு மாதமாக மனநல சிகிச்சையில் இருந்த பரத், மருத்துவர் ஹரிஹரனை தாக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com