'ஸ்டிக்கர் ஒட்ட கட்டுப்பாடு' போக்குவரத்துக்கு காவல்துறை திட்டவட்டம்!

வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக்கு காவல்துறை
போக்குவரத்துக்கு காவல்துறை முகநூல்

வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஊடகத்தில் பணி புரிபவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

போக்குவரத்துக்கு காவல்துறை
ஜூலையில் இடம் மாறுகிறது பிராட்வே பேருந்து நிலையம்

அதன்படி, இன்று முதல் அனுமதியின்றி ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டிருந்தது. முதல் முறை 500 ரூபாய் அபராதமும், அதன்பிறகு 1500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தது. இந்த உத்தரவில் தெளிவான விளக்கம் இல்லை என்று மருத்துவர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கு விளக்கமளித்துள்ள போக்குவரத்து காவல்துறை, நம்பர் பிளேட்டில் அரசு அங்கீகரித்த எழுத்துகள் மட்டுமே இருக்க வேண்டும்,வேறு ஸ்டிக்கர்கள் இருக்கக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக்கு காவல்துறை
நாமக்கல் - ஹோட்டலில் வாங்கப்பட்ட சிக்கன் ரைஸ்.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவர் அனுமதி

ஊடகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள், நம்பர் பிளேட் தவிர மற்ற இடங்களில் துறை சார்ந்த ஸ்டிக்கர்களை பயன்படுத்தலாம் என்று கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.துறை சார்ந்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனம், அத்துறையை சார்ந்தவர்கள் பெயரில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும்,அந்த வாகனங்களை உறவினர்கள், நண்பர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com