“முன்னாடி வண்டி இருக்கு, போய் ஏறு” ஓட்டுநரின் பதிலால் ஒருமையில் பேசிய பெண்.. பரபரப்பான பஸ் ஸ்டேண்ட்

பேருந்து எப்போது கிளம்பும் என்று கேட்ட பெண்ணிடம் சிகரெட் பிடித்துக்கொண்டே பதில்சொன்ன ஓட்டுநர்.. அலட்சிய பதிலால் ஓட்டுநரை ஒருமையில் பேசிய பெண்.. இரவு நேரத்தில் பரபரப்பான பேருந்து நிலையம்.. என்ன நடந்தது.. எங்கு நடந்தது.. முழுமையாக பார்க்கலாம்.
பயணி - ஓட்டுநர் இடையே வாக்குவாதம்
பயணி - ஓட்டுநர் இடையே வாக்குவாதம்புதியதலைமுறை

ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையத்தில் தினந்தோறும் அந்தியூர், கோபி, சித்தோடு, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று பவானி பேருந்து நிலையத்தில், பெண் ஒருவர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் பேருந்து புறப்படும் நேரம் குறித்து விசாரித்துள்ளார். அதற்கு ஓட்டுநரும் புகைப்பிடித்துக்கொண்டே "முன்னாடி வண்டி இருக்கு, அதுல போய் ஏறு" என கூறியதாக கூறப்படுகிறது.

பயணி - ஓட்டுநர் இடையே வாக்குவாதம்
‘கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன’ மொமண்ட்... போஸ் கொடுத்த திருடனை 24 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்!

இதனால் ஆத்திரமடைந்த பெண், ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அந்த பெண் ஓட்டுநரை ஒருமையில் பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இருப்பினும் இதுதொடர்பாக தற்போது வரை காவல்நிலையத்தில் எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயணி - ஓட்டுநர் இடையே வாக்குவாதம்
“அப்பா.. எங்கப்பா போன..” கண்ணீரை வரவழைக்கும் சிறுவனின் கதறல்.. சபரிமலையில் நடந்தது என்ன?

பரபரப்பான அந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள், இணையத்தில் பரவி விமர்சனங்களை பெறுகிறது. அதை கீழுள்ள இணைப்பில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com