தமிழ்நாடு
மக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை ஓயமாட்டோம்...உறங்கமாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம்
மக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை ஓயமாட்டோம்...உறங்கமாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம்
மக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை ஓயமாட்டோம்...உறங்கமாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவின் குடும்ப ஆட்சிதான் இன்று பதவியேற்று உள்ளதாக தெரிவித்தார். எம்எல்ஏக்கள் நியாயமான முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், சசிகலாவின் குடும்ப ஆட்சியை நீக்கி ஜெயலலிதாவின் புனிதமான ஆட்சியை நிறுவுவோம் எனவும் கூறினார். மக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை ஓயமாட்டோம்...உறங்கமாட்டோம் எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.