பழனி | நான் முதல்வன் திட்டத்தில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவி.. சட்டப் பல்கலை தேர்வில் வெற்றி!

சட்டப் பல்கலைக்கழக தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானு தேர்ச்சி பெற்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கரூர் மாணவி
கரூர் மாணவிபுதிய தலைமுறை

கரூர் செய்தியாளர் - ஆஜ்மீர் ராஜா

பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள மாணவி, சுமையா பானு. மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானு கண் பார்வை குறைபாடு கொண்டவர். மேலும் கை விரல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு அமையப்பெற்றவர். தன்னம்பிக்கை மிக்க மாணவியான சுமையா பானு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போது உதவியாளர் இன்றி, தானே தேர்வை எழுதினார். தேர்வில் வெற்றி பெற்று 540 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் 96, ஆங்கிலம் 59, புள்ளியல் 98, வரலாறு 94 , பொருளியல் 99, அரசியல் அறிவியல் 94 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உதவியைப் பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார் சுமையா பானு. தற்போது வெளிவந்த தேர்வு முடிவில் சட்டப் பல்கலைக்கழக தேர்வில் வெற்றி பெற்று மாணவி சுமையா பானு தேர்ச்சி பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்ற சுமையா பானுவிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ’ஸ்வீட்டி பேபி’ எனக் கூப்பிட்ட உயரதிகாரி.. தொல்லை தாங்கவில்லை என நீதிமன்றத்தை அணுகிய இளம்பெண்!

கரூர் மாணவி
“நான் முதல்வன் திட்டம், அரசு நூலகம் மூலம்..” - UPSC-ல் சாதித்து, தாய்க்கு பெருமை சேர்த்த மகள்!

மேலும் மாற்றுத்திறன் குழந்தைகள் பயிற்சி ஆசிரியர் சுகப்பிரியா தனிக்கவனம் செலுத்தி அளித்த பயிற்சியின் காரணமாக சுமையா பானு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானுவிற்கு தேர்வுக்கு சென்று வர போக்குவரத்து செலவு, தேர்வுக்கு தயாராகும் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ”சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உயரிய அரசு பதவிக்கு செல்வேன்” என மாணவி சுமையா பானு தெரிவித்துள்ளார்.

தேர்வில் வெற்றி பெற்ற சாதித்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவி சுமையா பானுவிற்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் படிப்பு செலவுக்கான உதவிகளை வழங்க பழனியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். உடலில் உள்ள குறைகளை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் போராடி தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ”இந்தியா வழங்கிய விமானத்தை இயக்கும் திறன்கொண்ட விமானிகள் எங்களிடம் இல்லை” - மாலத்தீவு அமைச்சர்

கரூர் மாணவி
’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..!” கைகள் துண்டிக்கப்பட்டாலும் துவளாத தன்னம்பிக்கை; சாதனை படைத்த மாணவி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com