“விஜயகாந்த் மறைவு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியிருக்கு” - இயக்குநர் பா. ரஞ்சித்

“தமிழ் திரையுலகில் மட்டும் அல்ல அரசியலிலும் தன்னை மிக உறுதியாக காண்பித்த மிகப்பெரிய ஆளுமை, விஜயகாந்த்” - இயக்குநர் பா.ரஞ்ஜித் உருக்கம்

அரசியலில், திரைப்படத்துறை என்று இரண்டிலும் தனக்கென்று தன்னிகரில்லா தனி இடம் பிடித்த மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு இயக்குநர் பா.ரஞ்ஜித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பா.ரஞ்சித், அதன்பின் செய்தியாளர்களிடையே பேசுகையில், “சிறுவயதில் நானும் விஜயகாந்த் அவர்களின் மன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவர் நடிக்கும் நிறைய திரைப்படங்களில் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார். எனது இளம் பருவத்தினை நினைத்து பார்க்கும்போது நான் அவரின் ரசிகராக இருந்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவர்.

பா. ரஞ்சித்
RIP Vijayakanth | "அண்ணனை இப்படியா பாக்கணும்..." உடைந்துபோன எம்.எஸ்.பாஸ்கர்

அவரின் இறப்பு என்பது மிகப்பெரிய வலியை உண்டாக்கியது. மிகப்பெரிய ஆளுமை அவர். தமிழ் திரையுலகில் மட்டும் அல்ல, அரசியலிலும் தன்னை மிக உறுதியாக காண்பித்தவர்” என்று கூறி தனது இரங்கலை உருக்கமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com