\
எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்புதிய தலைமுறை

RIP Vijayakanth | "அண்ணனை இப்படியா பாக்கணும்..." உடைந்துபோன எம்.எஸ்.பாஸ்கர்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கண்ணீர் மல்க அஞ்சலி.
Published on: 

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்த் உடலை கண்டு கலங்கி நின்ற எம்.எஸ்.பாஸ்கர்
விஜயகாந்த் உடலை கண்டு கலங்கி நின்ற எம்.எஸ்.பாஸ்கர்புதிய தலைமுறை

கண்கலங்கி பேசிய எம்.எஸ்.பாஸ்கர், “என்மீது மட்டுமல்லாமல் எல்லோரின் மீதும் அக்கறை கொண்ட நல்ல உள்ளம் அவர். இந்த அருமையான இதயத்தின் துடிப்பு இன்று அடங்கிவிட்டது. எப்பொழுதும் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் அவரிடம் மேலோங்கி காணப்படும். ஒரு குழந்தை மாதிரியானவர். எத்தனையோ முறை நான் அவரை பார்ப்பதற்கு முயற்சிதேன். ஆனால் தற்போது அவரை இப்படித்தான் பார்க்கவேண்டுமா?

எம்.எஸ்.பாஸ்கர்
RIP Vijayakanth | தீவுத்திடலில் விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கி நின்ற எம்.எஸ்.பாஸ்கர்

நாம் அனைவரும் அவரிடத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் யாருக்கும் கெடுதல் நினைக்ககூடாது, அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும், அனைவரும் வயிறார உண்ண வேண்டும் போன்றவைதான். இப்படிபட்ட எண்ணத்தினை நம்மில் விதைத்து சென்றுவிட்டார் அவர்.

அவரின் வழியை நாம் பின்பற்றுவோம். அண்ணன் இறைவனாய் வாழ்ந்தார், இறைவனிடத்திலேயே சென்றுவிட்டார். நிச்சயம் அவரது ஆன்மா நம்மை ஆசீர்வதித்து கொண்டே இருக்கும். ஒன்றே ஒன்று சொல்ல விரும்பிக் கொள்கிறேன், அண்ணா (விஜயகாந்த்தை குறிப்பிட்டு), மீண்டும் இதே மண்ணில் வாங்க, இதே கேப்டனாக வாங்க. இதுதான் என் கருத்தும் வேண்டுகோளும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com