ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன்
ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன்pt web

உப்பு போட்ட பொருளுக்கு ஒரு வரி உப்பு போடாத பொருளுக்கு ஒரு வரி: விந்தையான ஜிஎஸ்டி வரி - ப.சிதம்பரம்

உப்பு போட்ட பொருளுக்கு ஒரு வரி, உப்பு போடாத பொருளுக்கு ஒரு வரி என உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி வரி இந்தியாவில்தான் உள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: நாசர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... மன்மோகன் சிங் இறப்பு இந்தியாவுக்கு பெரிய இழப்பு. மன்மோகன் சிங்கின் சிந்தனை, கருத்துக்கள் புதிய பாதையை இந்தியாவில் வகுத்துள்ளது. 20 கோடி மத்திய வர்க்கத்திற்கு முழுக்க முழுக்க காரணம் மன்மோகன் சிங்தான். மன்மோகன் சிங்கால் 24 - 27 கோடி மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து முன்னேறியுள்ளனர்.

Theatre
GST
Theatre GST

பாமக கேட்கும் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உள் ஒதுக்கீடு என்பது முறையான கணக்கெடுப்பின் மூலம் தான் நடத்தப்பட வேண்டும். அரசுதான் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும். ஆனால், ஆளுநர்கள் அதில் வரம்பு மீறி தலையிடுவது தான் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணம். 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்றவர் தொடர்ந்து...

ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன்
5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்... டாடா குழுமம் போட்ட திட்டம்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் தான் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. உப்பு போட்ட பொருளுக்கு ஒரு வரி, உப்பு போடாத பொருளுக்கு ஒரு வரி என உலகத்திலேயே இந்தியாவில் போடப்பட்ட ஜிஎஸ்டி வரி தான் விந்தையான வரி என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com